கார் விபத்து வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
2021 இல் மாமல்லபுரம் அருகே யாஷிகா ஓட்டிய கார் விபத்துக்குள்ளானதில் அவரது தோழி உயிரிழந்தார்.
இந்த விபத்து காரணமாக அதிவேகமாக கார் ஓட்டியமை, உயிர்ச்சேதம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நடிகை யாஷிகா ஆனந்த் மீது மகாபலிபுரம் பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே மகாபலிபுரம் பொலிசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 21 ஆம் திகதி யாஷிகா நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் யாஷிகா கடந்த 21 ஆம் திகதி அன்று நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடியாணை பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறியுள்ளது.
அன்றைய தினமும் ஆஜராகாவிட்டால் அவரை பொலிஸார் கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.