Wednesday, July 16, 2025
27.8 C
Colombo
சினிமாவிக்ரம் படத்தில் இணைந்த ஹொலிவுட் நடிகர்

விக்ரம் படத்தில் இணைந்த ஹொலிவுட் நடிகர்

பா.ரஞ்சித் இயக்கும் ‘தங்கலான்’ படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.

சுதந்திர போராட்ட கால கட்டத்தில் கோலார் தங்க வயல் பகுதியில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து 3D தொழில்நுட்பத்தில் இந்த படம் தயாராகிறது.

மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உட்பட பலர் நடிக்கின்றனர்.

விக்ரமின் மிரட்டலான தங்கலான் பட தோற்றம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது ‘தங்கலான்’ படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஹொலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

டேனியல் கால்டாகிரோன் புகைப்படத்தை விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு “வேட்டைக்காரரான டேனியல் கால்டாகிரோனை தங்கலான் திரைப்படத்திற்கு வரவேற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

டேனியல் கால்டாகிரோன் ‘தி பீச்’, ‘தி பியானிஸ்ட்’ தி கிரேடில் ஆப் லைப் உள்பட 16 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

‘தி பியானிஸ்ட்’ படம் ஆஸ்கார் விருது பெற்றது.

டேனியல் கால்டாகிரோன் தங்கலான் படத்தில் இணைந்துள்ளதன் மூலம் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles