Thursday, December 11, 2025
26.7 C
Colombo
ஏனையவைகஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக இலங்கை மருத்துவ சங்கமும், புகையிலை, மதுபானம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான நிபுணர் குழுவும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது குறித்தும், பொருளாதார நன்மைகளுக்காக, பயிர்ச்செய்கை தொடர்பான சட்டங்களை தளர்த்துவது குறித்தும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தமது கடிதத்தில் இந்த அமைப்புக்கள் கோரியுள்ளன.

இலங்கையின் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அரசாங்கத்தின் கஞ்சா பயிர்ச்செய்கை நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்யும் என்று கூறியுள்ள குறித்த அமைப்புக்கள், இலங்கை மேலும் துயரத்திற்குள் செல்ல முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles