Saturday, August 16, 2025
27.2 C
Colombo
அரசியல்13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு திகாம்பரம் ஆதரவு

13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு திகாம்பரம் ஆதரவு

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தனிப்பட்ட ரீதியில் மாற்றுக்கட்சிகளை விமர்சிக்காமல், வேலைத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நேற்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசு பலவழிகளிலும் முயற்சித்து வருகின்றது. தோல்வி பயத்தாலேயே யானை – மொட்டு கூட்டணி இவ்வாறு இழுத்தடிப்பு செய்ய பார்க்கின்றது. ஆனாலும் தேர்தலை ஒத்திவைக்க முடியும் என நான் நம்பவில்லை.

அதேவேளை, 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்கு நாம் ஆதரவு. அதேபோல பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். நான் அமைச்சரவையில் இருந்தபோதும் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தினேன் என்று தெரிவித்துள்ளார். (a)

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles