Monday, July 14, 2025
28.9 C
Colombo
அரசியல்நாடு வங்குரோந்தடைந்தமைக்கு அனைத்து கட்சிகளும் பொறுப்பாகும் - பசில் ராஜபக்ஷ

நாடு வங்குரோந்தடைந்தமைக்கு அனைத்து கட்சிகளும் பொறுப்பாகும் – பசில் ராஜபக்ஷ

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சுதந்திரமடைந்து 74 வருடங்களில் நாட்டை ஆட்சி செய்த சகல கட்சிகளுமே காரணம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சில வருடங்களே நாட்டை ஆட்சி செய்ததாகவும் அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (24) காலை தலதா மாளிகையை வழிபட்ட பின்னர் ஊடகங்களுக்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ,

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படாது என நம்பித்தான் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தேன்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொஹொட்டுவ 252 பகுதிகளில் தனித்து போட்டியிடவுள்ளது.

கட்சிகளை விட்டு விலகி புதியவர்கள் இணைவது அரசியலின் இயல்பு எனவும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் எழும் சவால்களை வெற்றி கொள்ள வேண்டும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles