நேற்று (19) பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சாதனையை முறியடித்துள்ளார்.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்புக்கான அமைச்சரவை அமைச்சராக ஜீவன் தொண்டமான் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யும் போது அவருக்கு 28 வயது.
அதன்படி, இலங்கையில் அமைச்சரவை அமைச்சராகப் பதவியேற்ற இளம் அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் வரலாற்றைப் புதுப்பித்துள்ளார்.
முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த பெருமையை கொண்டிருந்தார்.
1977 இல் ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தில் 29 வயதில் அமைச்சரவை அமைச்சராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது