அமைச்சரவை சீர்த்திருத்தம் அடுத்தவாரம் இடம்பெறவுள்ளது.
ஆறு புதிய அமைச்சர்கள்வரையில் பதவி ஏற்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த அமைச்சரவை நியமனம் வழங்கப்படும் என்று அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள அமைச்சர்கள் பலர் வேறு துறைகளுக்கு மாற்றப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.