எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 90 வீத வெற்றியை சுதந்திர மக்கள் கூட்டணி பெற முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்தப் புதிய கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என தாம் தெளிவாகக் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ‘சுதந்திர மக்கள் கூட்டணி’யை நிறுவும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நாட்டில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் தொடர்பில் சில காலமாகவே பிரச்சினைகள் இருப்பதாகவும், நாட்டை உருவாக்குவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் ஜனநாயகம் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் எழுந்து நிற்கும் வகையில் ஜனநாயகம் தேவை என்றும், அந்த நோக்கத்தின் அடிப்படையில் சுதந்திர மக்கள் கூட்டணி ஆரம்பிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.