ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் நேற்று கைகோர்த்தன.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் தெரிவு செய்யப்பட்ட 5 மாவட்டங்களின் அமைப்பாளர்கள் பங்கேற்றிருந்ததுடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினரின் கொள்கைகள் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் நூறுக்கு நூறு வீதம் ஒத்துப்போகவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்
எனினும், இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் ஜனநாயகத்தின் பாதுகாப்பு தொடர்பிலேயே தாம் கட்சி என்ற ரீதியில் தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் கூறினார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்துகின்ற போது அவர் இதனை தெரிவித்தார்.