Friday, February 13, 2026
31.1 C
Colombo
அரசியல்கோட்டாவின் நிலையே கஞ்சனவுக்கும் ஏற்படும் - நளின் பண்டார

கோட்டாவின் நிலையே கஞ்சனவுக்கும் ஏற்படும் – நளின் பண்டார

எதிர்ப்புக்களை மீறி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சர் கஞ்சன விஜேசேகர நடவடிக்கை எடுத்தால், கோட்டாபய ராஜபக்ஷவின் நிலைமையே அவருக்கும் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

நிலக்கரி இறக்குமதியில் இடம்பெறும் மோசடிகளை முகாமைத்துவம் செய்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையோ அல்லது மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய தேவையோ ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

எது எவ்வாறாயினும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், தொழிற்துறைகள் முற்றாக வீழ்ச்சியடையும் என்றும் இது பொருளாதார நெருக்கடியில் கடுமையான தாக்கத்தை செலுத்தும் என்றும் நளின் பண்டார தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles