Wednesday, July 23, 2025
26.7 C
Colombo
ஏனையவைபாடசாலை மாணவியை பாலியல் வன்புணர முயன்ற உறவினர் கைது

பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர முயன்ற உறவினர் கைது

17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் மாமா கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கலென்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கலென்பிந்துனுவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபரை கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles