Sunday, April 12, 2026
26.1 C
Colombo
அரசியல்துமிந்தவுக்கு எதிரான மனுக்கள் மீது பெப்ரவரியில் விசாரணை

துமிந்தவுக்கு எதிரான மனுக்கள் மீது பெப்ரவரியில் விசாரணை

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார்.

அந்த தீர்மானத்திற்கு எதிராக பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர மற்றும் மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இதன்படி, துமிந்த சில்வாவின் பொதுமன்னிப்பு மற்றும் விடுதலையை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த 03 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

அனைத்து தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம், இந்த மனுக்கள் மீதான விசாரணையை பெப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles