Sunday, December 21, 2025
29.5 C
Colombo
அரசியல்கோட்டா நாட்டின் பொருளாதாரத்தையே சீரழித்து விட்டார் - நீதி அமைச்சர்

கோட்டா நாட்டின் பொருளாதாரத்தையே சீரழித்து விட்டார் – நீதி அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி கறுப்புப் பண கடத்தல்காரர்களின் பலியாகி நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பயங்கரமான பேரழிவிற்குள் கொண்டு சென்றதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ வெளிப்படுத்தினார்.

இன்று (15) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

1400 பில்லியன் மொத்த வருமானம் கொண்ட நாட்டில் வர்த்தகர்களுக்கு சலுகை வழங்குவதற்காக 600 பில்லியன் வரி வருமானத்தை குறைக்கும் போது நாட்டின் பொருளாதாரம் என்னவாகும் என்பதை சிறு குழந்தை கூட நினைத்துப் பார்க்க முடியும்.

தேர்தல் பிரச்சாரத்தில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்த சில கடத்தல்காரர்களின் தூண்டுதலால் நாட்டின் வரிக் கொள்கையை மாற்றியமைத்ததன் மூலம் ஏற்பட்ட அழிவை இன்று நாம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles