Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்நடப்பு அரசின் தீர்மானங்களுக்கு பொறுப்பேற்க முடியாது - பசில் ராஜபக்ஷ

நடப்பு அரசின் தீர்மானங்களுக்கு பொறுப்பேற்க முடியாது – பசில் ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொறுப்பேற்க தயாராக இல்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நடப்பு அரசாங்கத்திற்கு தான் ஆதரவு தெரிவித்தாலும் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றிரவு (12) இரவு ‘டிவி தெரண’வில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பேசும் போதே பசில் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இன்னும் சில நாட்கள் கவலைப்படாமல் இருந்தால், நம் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு தெளிவாக உள்ளது. இப்போது போராட்டம் இல்லை. என்ன வித்தியாசம்? 69 இலட்சம் வாக்குகளோடு ஆட்சிக்கு வந்தவரை அப்புறப்படுத்துமாறு மக்கள் கேட்டனர். அவர் போய்விட்டார் . இப்போது என்ன நடந்தது? இப்போது உணவு இருக்கிறதா? மக்களின் கஷ்டங்கள் தீர்ந்து விட்டதா? அதை ஏன் இப்போது ஊடகங்களில் காட்டவில்லை?மக்களுக்காக தியாகம் செய்த கோட்டாபய இன்று துயரத்தில் இருக்கிறார் என அவர் தெரிவித்துளளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles