Friday, May 23, 2025
31 C
Colombo
அரசியல்தமிழ் கட்சிகள் - ஜனாதிபதி இன்று சந்திப்பு

தமிழ் கட்சிகள் – ஜனாதிபதி இன்று சந்திப்பு

தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்றைய பேச்சுவார்த்தை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஏற்கனவே ஜனாதிபதியை தனித்தனியாக சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles