இலங்கையில் தேர்தல் நடத்துவதற்கு இது பொருத்தமான நேரமாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடக மையத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த தேர்தல்களில் வெற்றி பெற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாமல் போனதற்கும் மன்னிப்பும் கோரினார்.
எவ்வாறாயினும், பின்னடைவுகளை நிவர்த்தி செய்து, தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.