ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து மக்களுக்கு அறிவிப்பதற்காக நாவலப்பிட்டி – வெலிகம்பொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் எரிவாயு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை ஜனாதிபதி நீக்கியதாகவும், எதிர்வரும் இரண்டரை வருடங்களில் நாட்டின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த தற்போதைய ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியை முன்னெடுத்துச் செல்லாமல், அக்கட்சியின் அங்கத்துவத்தை அதிகரிக்காமல் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தமை சாதகமான விடயம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.