Saturday, September 21, 2024
28 C
Colombo
அரசியல்ஊழியர்களுக்கு ஆடம்பர செலவு செய்யவில்லை – மைத்ரிபால சிறிசேன

ஊழியர்களுக்கு ஆடம்பர செலவு செய்யவில்லை – மைத்ரிபால சிறிசேன

ஜனாதிபதியின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 57 சதவீதத்தை தமது தனிப்பட்ட ஊழியர்களுக்கு தாம் செலவிட்டதாக வெளியான செய்திகளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த செய்தியை மறுத்த அவர், தான் குறித்த நிதியை தேசிய மட்டத்தில் பல பாரிய திட்டங்களுக்கு செலவிட்டதாக கூறினார்.

எனக்கு முன்னாள் பதவியிலிருந்த மஹிந்த ராஜபக்ஷவும், நானும் எமது தனிப்பட்ட ஊழியர்களுக்காக செலவழித்த செலவினங்கள் பற்றிய விபரங்களைக் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் லயனல் குருகே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், அவரை மேற்கோள் காட்டி பல அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் என்னைத் தாக்கத் தொடங்கியுள்ளன.

அவருக்கு தகவல் வழங்கியவர்கள் தவறான தகவல்களை அளித்துள்ளனர்.

எனக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நாடளாவிய ரீதியிலான பல முக்கிய திட்டங்களுக்கு செலவிட்டுள்ளேன். இதில் கிராம சக்தி திட்டம், சிறுநீரக நோய் தடுப்பு திட்டம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு திட்டம் ஆகியவையும் அடங்கும். போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட சிலருக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஆவணங்களில் கையெழுத்திட்டேன். அந்த காலப்பகுதியில் இவர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதித்திருந்தால் போதைப்பொருள் விவகாரம் இன்று பாரதூரமானதாக இருந்திருக்காது.

மேலும் நான் ஸ்மார்ட் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலர்களுக்கு 1000 மடிக்கணினிகளை வழங்கிவைத்தேன். எனவே, குறித்த ஊடக நிறுவனங்கள் தங்கள் அறிக்கைகளை சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles