இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கத் தவறினால், சீனாவுக்கு எதிராக “#Chinagohome” என்ற பிரசாரம் நாட்டில் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் MP சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் எச்சரித்துள்ளார்.
சீனா இலங்கை தேசத்தின் உண்மையான நண்பராக இருந்தால் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஆதரவளிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால், மக்கள் கோட்டாகோஹோம் பிரச்சாரத்தை முன்னெடுத்தது போல், சைனாகோஹோம் பிரச்சாரமும் தொடங்குவார்கள் என்று அவர் எச்சரித்தார்.
