Friday, January 30, 2026
26.7 C
Colombo
அரசியல்நாம் ஒருபோதும் மக்களை கைவிடவில்லை - மஹிந்த ராஜபக்ஷ

நாம் ஒருபோதும் மக்களை கைவிடவில்லை – மஹிந்த ராஜபக்ஷ

நல்லாட்சி அரசாங்கம் அதன் ஆட்சிக்காலத்தில் அதிகக் கடனைப் பெற்றிருந்ததாகவும், நாம் மக்களை ஒருபோதும் கைவிடவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (22) விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘இக்கட்டான சூழ்நிலையிலேயே நாம் நாட்டின் ஆட்சியை பொறுப்பேற்றோம். ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற வகையில் வரவு செலவுத் திட்டத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கப் போவதாக குறிப்பிட்டார்.அத்தகைய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு நாம் செய்ய வேண்டிய பல நீண்ட கால மற்றும் குறுகிய கால செயற்பாடுகள் உள்ளன. இவை அனைத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் செயல்முறையின் யதார்த்தங்கள், அத்தகைய மூலோபாயத் திட்டத்தில் நாம் நகர்ந்தால் மட்டுமே நேர்மறையான எதிர்காலத்தை உருவாக்க முடியும். எனவே நாம் அனைவரும் திருத்தங்களுக்கு உட்பட்டு அதை ஆதரிப்பது முக்கியம்’ என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles