ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக, நம்பகமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி, த எக்கமிக்நெக்ஸ்ட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது அவர் நாடாளுமன்றின் ஊடாகவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மக்கள் ஆணை இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு மக்கள் ஆணை அவசியம் என்ற கருத்து நிலவுகிறது.
எனவே ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்தி, மக்கள் ஆணையைப் பெற்று அந்த மாற்றங்களை ஏற்படுத்தும் எண்ணத்தில் ஜனாதிபதி இருப்பதாக மூன்று முக்கிய தகவல் மூலங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.