ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் வாழ்க்கை போராட்டத்தை எதிர்நோக்கியுள்ள 22 மில்லியன் மக்களுக்கு எந்த தீர்வும் வழங்கப்படவில்லை.
2023ஆம் ஆண்டு இறுதிவரை பொறுமையாக இருக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.
சுமைகளையும் துன்பங்களையும் மக்கள் எவ்வாறு மேலும் 13 மாதங்கள் தாங்கிக் கொள்ள முடியும்.
ஜனாதிபதி அளித்த வாக்குறுதியும் நிவாரணமும் என்ன ஆனது? என அவர் மேலும் தெரிவித்தார்.