வெளிநாட்டு குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாக நாடு கடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையின் பிரஜை இல்லை எனக் கூறப்படும் டயனா கமகே எம்.பியை உடனடியாக குடிவரவு திணைக்களத்தின் மிரிஹான தடுப்பு மையத்திற்கு அழைத்துச் சென்று நாடு கடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் வெளிநாட்டு பிரஜையாக இருந்து எம்.பி பதவியை வகிக்கிறார் என கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஆராய்ந்து அளுத்கடை நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளதாக ரகுமான் தெரிவித்தார்.
இந்த அறிக்கையை அரசாங்கம் தெளிவாக மறைத்துவிட்டதாகவும், இவ்விவகாரத்தை விசாரித்த இரண்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் முஜுபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.