Tuesday, May 20, 2025
27.8 C
Colombo
சினிமாநடிப்பிலிருந்து தற்காலிக ஓய்வு பெறுகிறார் ஆமிர் கான்

நடிப்பிலிருந்து தற்காலிக ஓய்வு பெறுகிறார் ஆமிர் கான்

நடிப்பிலிருந்து தற்காலிக ஓய்வு பெறுவதாக பொலிவூட் நடிகர் ஆமிர் கான் அறிவித்துள்ளார்.

அமிர் கான் நடிப்பில் வெளியான லால்சிங் சத்தா எதிர்பார்த்த அளவுக்கு வசூலை கொடுக்கவில்லை. சமூக வலைத்தளத்தில் இப்படத்தை புறக்கணிக்கவேண்டும் என்ற பிரசாரமும் முன்வைக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு எடுப்பதற்காக அவர் அமெரிக்கா சென்றிருந்தார். இதன்போது அவர் நடிப்பில் இருந்து சில காலம் விலகி இருக்கப்போவதாக செய்தி வெளியானது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், அவர் தனது வாழ்க்கையில் குடும்பத்தினருக்கு போதிய நேரம் ஒதுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதனால் நடிப்பில் இருந்து தற்காலிக ஓய்வு பெறப்போவதாகவும், அடுத்ததாக சாம்பியன்ஸ் என்ற படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அவர் பேட்டியளித்துள்ளார்.

சாம்பியன்ஸ் படத்தில் நான் நடிக்க மாட்டேன், தகுதியான நடிகர்களைத் தேர்வு செய்வேன். நான் நடிப்பில் இருந்து சில காலம் விலகி இருக்கலாம் என்று நினைக்கிறேன். நான் படத்தில் நடிகனாக மட்டும் நடிக்கும் போது வாழ்க்கையில் இதற்கு முன்பு நடக்காத அளவுக்கு கடுமையான இழப்பை சந்திக்கிறேன். சான்பியன்ஸ் படக்கதை அழகானர் அருமையானர். எனது 35 ஆண்டுகால நடிப்பு வாழ்க்கையில் இப்போதுதான் நடிப்புக்கு ஓய்வு கொடுக்கிறேன். நடிப்பில் மட்டுமே 35 ஆண்டுகளாக கவனம் செலுத்தினேன். என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இது நியாயமாகபடவில்லை என்று நினைக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles