ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது .
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று மாலை 05 மணிக்கு அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு – செலவு திட்டம் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இதன்போது விளக்கமளிக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கு முழுமையான ஆதரவை வழங்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளதாக சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவு திட்டத்தைப் பரிசீலித்த பின்னரே அதற்கு ஆதரவளிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.