எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை சிறிய மாற்றங்களுடன் தற்காலிகமாக மீண்டும் நியமிக்கப்பட்டதுடன் நிரந்தர அமைச்சரவை நியமனம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணக்கப்பாடு எட்டப்படாமையினால் நாளுக்கு நாள் தாமதமானது.
காலநிலை மாற்றம் தொடர்பான உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வார இறுதியில் எகிப்துக்கு செல்லவுள்ளதாகவும், விஜயத்தின் பின்னர் புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.