Friday, January 17, 2025
28.6 C
Colombo
சினிமாசமந்தாவை புகழ்ந்த ஹொலிவுட் ஸ்டன்ட் இயக்குநர்

சமந்தாவை புகழ்ந்த ஹொலிவுட் ஸ்டன்ட் இயக்குநர்

சமந்தா நடித்திருக்கும் யசோதா திரைப்படம் நவம்பர் 11 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கிய, படத்தின் கதையானது வாடகைத் தாய்களைப் பராமரிக்கும் சுகாதார வசதியைப் பற்றியதhகும்.

மேலும், சமந்தா தனது குழந்தைக்கு சிறந்த குடும்பத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர்கள் நேற்று மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

அதில், சமந்தா நடித்த ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. யசோதா படத்தில் சண்டை காட்சிகளுக்கு சமந்தாவுக்கு உதவிய ஹொலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் இந்த சண்டை காட்சிகளில் சமந்தா ஆற்றிய பணி குறித்து விவரிக்கிறார்.

“சமந்தாவுடன் பணிபுரிவது எனக்குப் பிடிக்கும், ஏனென்றால் நான் சமந்தாவிடம் ஆக்‌ஷன் கோரியோகிராஃபியைக் காட்டும்போது அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார். தன்னால் முடிந்ததைச் செய்ய சமந்தா உண்மையில் தயாராக இருக்கிறார். ஒரு ஆக்‌ஷன் இயக்குனராக, அதைத்தான் நான் விரும்புகிறேன் என சமந்தாவை புகழ்ந்து அவர் பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles