Saturday, May 10, 2025
32 C
Colombo
சினிமாஅரிய நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா

அரிய நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா

நடிகை சமந்தா Myositis எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழில் முன்னணி நடிகையான சமந்தா, விவாகரத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

குறித்த புகைப்படத்தில் அவர் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே பின்னணி குரலை பதிவு செய்கிறார். அதனுடன் அவர் எழுதியுள்ள பதிவில், ‘சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் நிலை இருப்பது கண்டறியப்பட்டது. நிவாரணம் வந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சிறிது நேரம் எடுக்கும். நாம் எப்பொழுதும் வலுவான, முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நான் மெதுவாக உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்த பாதிப்பை ஏற்றுக்கொள்வது நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் ஒன்று. நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு; உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும். மேலும் ஒரு நாளை என்னால் கையாள முடியாது என்று உணர்ந்தாலும், எப்படியோ அந்த தருணம் கடந்து செல்கிறது.

நான் குணமடைய இன்னும் ஒரு நாள் நெருங்கிவிட்டேன் என்றுதான் அர்த்தம் என்று நினைக்கிறேன். உங்களை நேசிக்கிறேன். இதுவும் கடந்து போகும்’ என தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles