நாட்டுக்காக வேண்டுமென்றே தவறான முடிவுகளை எடுக்கவில்லை எனவும், அதனால் தம்மை யாரும் குற்றவாளிகள் என கூற முடியாது எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்களை சீண்டி விட்டு கேள்வி கேட்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.
நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் அஞ்சாமல் முகங்கொடுக்கும் குழுவே அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும்.
அவ்வாறான சவால்களை எதிர்கொள்ள பொதுஜன பெரமுனவே தகுதியானது என அவர் மேலும் தெரிவித்தார்.
‘சாம்பலில் இருந்து எழுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றாவது கட்சி கூட்டம் புத்தளத்தில் இடம்பெற்றது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புத்தளம் ஆரட்சிக்கட்டு பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.