ராஜபக்ஷவின் குடும்பத்தில் ஒருவரை மீண்டும் ஜனாதிபதியாக்க சிலர் முயல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
திவுலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் ராஜபக்ஷவினரின் அடிமை மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை விட்டொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த நாட்டில் சுதந்திர மனிதர்களாக வாழ வழி செய்வதாக கூறினார்.
மேலும் ராஜபக்ஷவினர் இன்னும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் அவ்வாறான நிலைமை ஏற்படாமல் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு என்றும் கூறினார்
எந்தவொரு மனிதருக்கும் எந்த வேலையும் செய்ய முடியாத காலம் வரும் எனவும் உடல் பலமும் மனவலிமையும் குறைந்துள்ளதை உணர்ந்து மக்கள் நிராகரிக்க முன் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.