தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாவார்
இந்நிலையில், மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவை இட்டுள்ளார்.
அதில், பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்த வாய்ப்பு தற்போது ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்துள்ளது. இது எனக்கு பொறாமையாக உள்ளது. இப்படி நான் பொறாமை கொள்வது இதுவே முதல் முறை. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும்எ எனது மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.