எழுத்தாளர் கல்கியின் நாவலை மையமாக வைத்து நீணட நாள் முயற்சியின் பின்னர் எடுக்கப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.
வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.
அதே போல நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபனும் நடித்துள்ளனர்.ஏ. ஆர் ரகுமானின் இசை இப்படத்திற்கு மிகவும் பலம் சேர்த்துள்ளது.
5 பாக நாவல்களை கொண்ட இப்படத்தை மணிரத்னம் 2 பாக படமாக எடுத்துள்ளார்.
அதில் முதல் பாகம் அண்மையில், திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
5 மொழிகளில் பான் இந்திய படமாக ரிலீஸ் ஆகியுள்ள இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் முதல் நாளில் உலகளவில் 80 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்திருந்த இப்படம், இரண்டாம் நாள் முடிவில் 150 கோடி ரூபாவுக்கு மேல் வசூல் பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது மூன்றாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி விடுமுறை தினமான நேற்று இப்படம் 80 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் மூன்று நாள் முடிவில் 230 கோடி ரூபாவுக்கு மேல் வசூல் பெற்று சாதனை படைத்துள்ளது.