Tuesday, March 17, 2026
29.5 C
Colombo
அரசியல்மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்பு?

மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்பு?

மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (03) பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதவிப் பிரமாணம் செய்யவுள்ள அனைத்து அமைச்சர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பதவிப் பிரமாணம் செய்யும் நேரம் குறித்து இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றின் பெயர்கள் ஜனாதிபதியிடம் முன்மொழியப்பட்ட போதிலும் அவர்களில் சிலர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles