Monday, September 15, 2025
29.5 C
Colombo
சினிமாசிகிச்சைக்காக வெளிநாடு சென்றார் சமந்தா

சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார் சமந்தா

சமந்தா நடிப்பில் ‘யசோதா’ என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
 
இதைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார். 

இந்தியிலும் சமந்தாவிற்கு பட வாய்ப்புகள் வருகின்றன. இந்நிலையில், நடிகை சமந்தா வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

கடந்த சில வருடங்களுக்கு முன் சமந்தாவிற்கு தோல் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ‘அஞ்சான்’ படப்பிடிப்பின்போதும் அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வந்தார். 

தற்போது அந்த பிரச்சினை மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சமந்தா வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால், சமந்தா தரப்பிலிருந்து இவ்விடயம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles