நாடாளுமன்றம் நாட்டுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக நாட்டைச் சிதைக்கச் செய்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று (22) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் தான் சிறந்த நாடாளுமன்றம் என புகழுரைத்தாலும், நாட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
மெழுகுவர்த்தியில் இருந்து வானொலி, தொலைக்காட்சி என ஒவ்வொரு பொருளின் விலையும் வான் வரை உயர்ந்துள்ளது.
ஒரு சராசரி மனிதன் தனது வாகனத்திற்கு புதிய டயர் ஒன்றை மாற்றிக் கொள்வதற்கு பெறும் சம்பளத்தை போல் 4 மடங்கு செலவழிக்க வேண்டியுள்ளது.
எல்லா பிரச்சினைக்கும் IMF ஐ நாடும் அரசினால் வேறு தீர்வுகளை முன்வைக்க முடியவில்லை.
இவ்வாறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் போது மக்கள் வாயை மூடிக் கொண்டு இருக்க மாட்டார்கள்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் கிளர்ச்சி செய்வது நியாயமானது எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
அத்துடன், ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளை தேர்தல் மூலம் வீட்டுக்கு அனுப்ப முடியாது என கூறும் அவர், அவ்வாறான அரசியல்வாதிகளை விரட்ட போராட்டத்தில் ஈடுபடுவதே சிறந்த வழி என்றார்.