சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது நிலவும் நிலைமையை சமாளிக்க நிர்வாகம் ஒரு மூலோபாயத்தை கொண்டுள்ளது என பிரதமர் குணவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நிலைமையை தீர்க்க தற்போதைய நிர்வாகத்திற்கு பல்வேறு நாடுகள் உதவுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பலமான அரசியல் விசுவாசங்களைக் கொண்ட சில குழுக்கள் வெளிநாட்டு அமைப்புகளை இதில் ஈடுபடுமாறு கோருவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்திற்கு எதிராக சிலர் முறைப்பாடு செய்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.