நாட்டிற்கு ஏற்ற நடுநிலையான புதிய அரசியல் சக்தி எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை.
மக்களின் நம்பிக்கையை வெல்வதற்காக நாடாளுமன்றத்திற்குள், நடுநிலையான அரசியல் சக்தியை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது.
தற்போது 108 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் உள்ளனர்.
அதனை 113 ஆக அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு உருவாக்கப்படும் புதிய அரசியல் சக்தியில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் இணைந்துகொள்வர்.
நாடு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார்.
அவர், பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மக்கள் அவகாசம் வழங்கியுள்ளனர்.
அதனை நிறைவேற்றாத சந்தர்ப்பத்தில், அவருக்கு எதிராக மக்களின் எதிர்ப்புகள் ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.