தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளும் எண்ணம் தமக்கு இல்லை என அக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைத்ரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.