Monday, April 20, 2026
32.8 C
Colombo
அரசியல்புதிதாக நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்களுக்கு 111 வாகனங்கள் - ஜீ.எல். பீரிஸ்

புதிதாக நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்களுக்கு 111 வாகனங்கள் – ஜீ.எல். பீரிஸ்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களின் செயலணிக்கு 111 வாகனங்கள் ஒதுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலையில் இருக்கையில், முப்பத்தேழு இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதன் மூலம் நாட்டின் செலவு மேலும் அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஒரு இராஜாங்க அமைச்சருக்கு ஐந்து பேர் கொண்ட தனிப்பட்ட பணியாளர்கள் இருப்பார்கள் எனவும், அவர்களில் மூவருக்கு அரசு மூன்று வாகனங்களை வழங்கும் எனவும் எம்.பி ஒருவர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சருக்கு செயலாளர்இ செய்தித் தொடர்பாளர் மற்றும் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆகியோருக்கு இந்த வாகனங்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles