Monday, December 22, 2025
30 C
Colombo
அரசியல்கடந்த இரண்டு வருடங்களாக ராஜபக்ஷர்கள் மீது திருட்டு குற்றச்சாட்டு இல்லை - சாகர MP

கடந்த இரண்டு வருடங்களாக ராஜபக்ஷர்கள் மீது திருட்டு குற்றச்சாட்டு இல்லை – சாகர MP

கடந்த இரண்டு வருடங்களாக ராஜபக்ஷர்கள் மீது எந்தவிதமான திருட்டு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது நேற்று (11) கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இந்த இரண்டு வருட காலத்தில், ராஜபக்ஷர்கள் திருடினார்கள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். நாட்டைப் பற்றிய அறிவும், அரசியல் அறிவும், ஆட்சி அறிவும் இல்லாதவர்களே அவற்றை நம்புவர். ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களில் யாரும் திருட்டு குற்றச்சாட்டிற்கு ஆளாகவில்லை. கடந்த காலங்களில், வேறு வகையான குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது இருந்தன. இம்முறை ராஜபக்ஷ அரசுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு கூட முன்வைக்கப்படவில்லை. கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் கட்சியுடன் பலமாக இருக்கிறார். அந்த பலத்துடன் கட்சி எந்த பிரச்சனையும் இல்லாமல் முன்னேறி வருகிறது’ என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles