மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்துக்கு பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முதல் தடவையாக நேற்றைய தினம் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது தற்போதைய அரசியல் நிலைமை, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் எதிர்கால செயற்பாடுகள் என்பன தொடர்பில் இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளதாடு இதில் ஹம்பாந்தோட்டை மற்றும் குருணாகல் மாவட்டங்களின் பிரதானிகள் பங்கேற்றிருந்தனர்.
கட்சியின் செயலாளர் சாஹர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.