Saturday, January 31, 2026
32.2 C
Colombo
அரசியல்ஜீ.எல்.பீரிஸ் உட்பட சில எம்.பிக்கள் எதிர்க்கட்சியில் இணைந்தனர்

ஜீ.எல்.பீரிஸ் உட்பட சில எம்.பிக்கள் எதிர்க்கட்சியில் இணைந்தனர்

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில்  இணைந்துள்ளனர்.

இதனை நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான ஜி.எல்.பீரிஸ், இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.

இதன்படி, பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராசிரியர் சரித்த ஹேரத், கலாநிதி நாலக்க கொடஹேவா, குணபால ரத்ணசேகர, கலாநிதி உபுல் கலப்பத்தி, திலக் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ் குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல  ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாக அவர் அறிவித்தார்.

இன்று 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுகிறது.

இதன்போது, விசேட உரையொன்றை நிகழ்த்திய, நாடாளுமன்ற பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதனை அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles