ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு இந்த கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.
தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அரசின் திட்டங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.