இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர் நாடுகளும் ஒன்றிணைவது அவசியமானது என ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி (Shunichi Suzuki) தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் இலங்கையின் ஏனைய கடன் வழங்குநர் நாடுகளை ஒருங்கிணைக்கும் பணிகளை ஜப்பான் முன்னெடுக்கும் என்றும் இன்று அவர் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைக்கு, தமது பெரிய கடன் வழங்குநர் நாடுகளை ஒன்றிணைக்குமாறு ஜப்பானை இலங்கை கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் ரோய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்
எவ்வாறாயினும், முன்னதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி (Yoshimasa Hayashi), அவ்வாறான ஒரு சந்திப்பை நடத்துவதற்கு தமது நாடு இலங்கையுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வில்லை என்று கூறினார்.