முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , இலங்கைக்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் எனில் அதற்கு ஆட்சேபனை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்க தயாரா என ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.
இதற்கு பதிலளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, “ அதற்கு எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அவருக்கு கண்டிப்பாக வாக்களிப்போம்” என்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தெரிவிக்கையில்,
கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக இந்த நாட்டுக்கு வர வேண்டும். அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். 60,000,000 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அவர்.
அப்படியென்றால் யார் தான் அவர் பிரதமராவதை விரும்ப மாட்டார்கள். நான் எதிர்க்கவில்லை. அவர் கேட்டால் நாங்கள் பிரதமர் பதவிக்கு வாக்களிப்போம்” என்றார்.