Saturday, November 1, 2025
31 C
Colombo
சினிமாதிறமை இல்லாவிட்டால் வாய்ப்புகள் கிடைக்காது - நடிகை அதிதி

திறமை இல்லாவிட்டால் வாய்ப்புகள் கிடைக்காது – நடிகை அதிதி

இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி, கார்த்தி ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடித்திருப்பதன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் அதிதியின் நடிப்பு மற்றும் நடனத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அவர் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஷங்கரின் மகள் என்பதாலேயே அவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர் கூறியதாவது,

‘என் அப்பாவால் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் திறமை இல்லாவிட்டால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காது. ரசிகர்கள் ஆதரிக்க மாட்டார்கள். இந்தத் துறையில் நிலைத்து நிற்க முடியாது. வாரிசு அந்தஸ்து இல்லை, மாறாக திறமைதான் கை கொடுக்கும்’என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles