பீல்ட் மார்ஷல் பதவியில் இருந்து தம்மை நீக்கினால் அந்த பதவிக்கு மேலான கௌரவப் பட்டத்துடன் தான் மீண்டும் வருவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (15) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பீல்ட் மார்ஷல் பதவி தொடர்பான நிலைப்பாடு மற்றும் அவர் கைது செய்யப்படுவதில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவருக்கு கிடைத்த கெளரவப் பதவி குறித்து கேட்டபோது, அந்த பதவியானது, பீல்ட் மார்ஷல் பதவிக்கு மேலாக நாட்டின் பெயருடன் தொடர்புடைய மிகவும் மதிப்புமிக்க பதவியாகும் என்றார்.
அதன்படி அவரை இலங்கையின் மார்ஷல் என அழைக்க வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த பதவியை பெற்றுக்கொடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.