துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் இராஜினாமா செய்த நிமல் சிறிபால டி சில்வா இன்று (02) மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (02) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு நிமல் சிறிபால டி சில்வாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானிய நிறுவனமொன்றில் அமைச்சர் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நிமல் சிறிபால டி சில்வா கடந்த 6 ஆம் திகதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் நேற்று (30) கையளிக்கப்பட்டதுடன்இ நிமல் சிறிபால அந்தக் குற்றச்சாட்டில் நிரபராதி என அந்தக் குழுவின் அறிக்கை நிரூபித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.