Friday, October 31, 2025
25 C
Colombo
அரசியல்வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹர்ஷ

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹர்ஷ

புதிய அரசாங்கத்தினால் அமைச்சராக தான் நியமிக்கப்பட உள்ளதாக பரவும் செய்திக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுடன் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு முனைந்துள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்திக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்த வதந்தியில் தம்மைப் பற்றிய குறிப்பை 100% மறுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதவிட்டுள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எவரும் தன்னுடன் கலந்துரையாடவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles