நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப் பட்டிருந்தாலும் அது மக்களது ஆணை அல்லவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெவித்தார்.
அத்துடன், நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய சபை ஒன்று உருவாக்கப்படும் எனவும், அதனூடாக நல்ல யோசனைகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய சர்வகட்சி அரசாங்கம் என்பது நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கானதே தவிர அமைச்சுப் பதவிகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொள்வதற்கானது அல்ல.
நாட்டு மக்களின் நிலைப்பாடு ஒன்றாகவும் நாடாளுமன்றத்தின் நிலைப்பாடு வேறொன்றாகவும் இருக்கின்றன.
மக்கள் மத்தியில் சென்று வாக்கு கேட்கும் போது நிச்சயமாக தான் வெற்றி பெறுவதாக அவர் கூறினார்